< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மங்களூரு பிலிகுலா உயிரியல் பூங்காவில் பெண் புலி சாவு
|8 Jun 2023 12:15 AM IST
மங்களூரு பிலிகுலா உயிரியல் பூங்காவில் பெண் புலி செத்தது.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் பிலிகுலா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேத்ராவதி என்ற 15 வயது பெண் புலி உள்ளது. கடந்த 4-ந் தேதி இந்த புலியும், மற்றொரு ஆண் புலியும் சண்டையிட்டு கொண்டது. இந்த சண்டையில் நேத்ரா புலியின் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த உயிரியல் பூங்கா ஊழியர்கள், உடனே கால்நடை டாக்டர்களுக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து சென்ற கால்நடை டாக்டர்கள் புலிக்கு சிகிச்சை அளித்தனர். இதையடுத்து கால்நடை டாக்டர்கள் அதன் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் புலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதை பிலிகுலா உயிரியல் பூங்காவை சேர்ந்த அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.