< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரசு பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
|25 July 2022 10:37 PM IST
உடுப்பியில் அரசு பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
உடுப்பி:
உடுப்பி மாவட்டம் கார்கலா டவுன் ஹட்கோ காலனியில் வசித்து வந்தவர் சுஷ்மிதா (வயது 25). இவர் கார்கலா தாலுகா அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுஷ்மிதா வீட்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை கண்விழித்த அவரது குடும்பத்தினர் சுஷ்மிதா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து தேடி பார்த்துள்ளனர்.
அப்போது தான் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் கார்கலா டவுன் போலீசார் விரைந்து வந்து, கிணற்றில் இருந்த சுஷ்மிதா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலை செய்த சுஷ்மிதாவின் உடலுக்கு உடுப்பி கலெக்டர் குர்மாராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்.