< Back
தேசிய செய்திகள்
டெல்லி மெட்ரோவில் பயணியை செருப்பால் அடித்த சக பயணி; வைரலான வீடியோ
தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோவில் பயணியை செருப்பால் அடித்த சக பயணி; வைரலான வீடியோ

தினத்தந்தி
|
1 Aug 2024 3:20 AM IST

டெல்லி மெட்ரோவில் ஜூலை மாத தொடக்கத்தில், பயண சீட்டு வழங்கும் கவுண்ட்டரில் 3 பேர் சண்டை போட்டு கொள்ளும் வீடியோ வைரலானது.

புதுடெல்லி,

டெல்லியில் மக்களின் அன்றாட பயணத்திற்கு உதவியாக மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. கல்லூரி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலரும் மெட்ரோவை பயன்படுத்துகின்றனர்.

20 ஆண்டுகளாக மக்களின் அதிக வசதியான போக்குவரத்தில் ஒன்றாக மெட்ரோ ரெயில் ஆனபோதிலும், சமீப நாட்களாக பயணிகளின் நடவடிக்கைகளால் அதிக கவனம் பெற்றுள்ளது.

அடிக்கடி சண்டை போடுவது, நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்து வெளியிடுவது, பாட்டு பாடுவது, வினோத ஆடைகளை அணிவது, காதல் ஜோடிகளின் செயல்கள் என மெட்ரோ ரெயிலில் பல விசயங்கள் நடந்து வருகின்றன.

இந்த வரிசையில் பயணிகள் இருவர், பயணத்தின்போது ஒருவருக்கொருவர் மோதிய சம்பவமும் சேர்ந்துள்ளது. அதுபற்றிய வீடியோ ஒன்று, எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

அதில், 2 பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது, அவர்களில் ஒருவர் திடீரென கீழே குனிந்து, காலில் கிடந்த செருப்பை கழற்றி மற்றொரு பயணியை அடிக்கிறார்.

இதற்கு அந்த பயணி பதிலுக்கு 2 முறை அடித்து தாக்குகிறார். வீடியோவின் இறுதியில், கருப்பு சட்டை போட்ட வெள்ளை மனதுக்காரர் ஒருவர் முன்னே வந்து, அந்த நபர்களின் சண்டையை தடுக்க முயல்கிறார். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தபடி இருக்கின்றனர். பின்னர் வீடியோ நிறைவடைகிறது.

இந்த மோதலுக்கான காரணம் சரியாக தெரிய வரவில்லை. எனினும், வீடியோவை 20 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். பலர் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒருவர், அவர் மதுபோதையில் இருப்பது போல் தெரிகிறது என்றும், மெட்ரோவுக்குள் எப்படி ஒருவரை மற்றொருவர் செருப்பை கொண்டு அடிக்கலாம் என்றும் கேட்டுள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், மெட்ரோவில் ஒவ்வொரு நாளும் இலவச பொழுதுபோக்கு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காணலாம். டெல்லி மெட்ரோவை ஒருவரும் அடித்து கொள்ள முடியாது. ஆனால், பயணிகள் மட்டுமே அடித்து கொள்வார்கள் என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன், ஜூலை மாத தொடக்கத்தில், பயண சீட்டு வழங்கும் கவுண்ட்டரில் வாக்குவாதம் ஏற்பட்டு, 3 பயணிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொள்ளும் வீடியோ வைரலானது.

டோக்கன் பெறுவதற்காக வரிசையில் நிற்கும்போது, வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்தும், முகத்தில் குத்தியும் தாக்கி கொண்டனர். அவர்களை தடுக்க சென்ற மற்றொரு நபருக்கும் கன்னத்தில் அறை விழுந்தது.

மேலும் செய்திகள்