தந்தை, சித்தப்பா, மாமா... 15 வயது மகளை ஒரு மாதம் சுற்றி, சுற்றி பலாத்காரம் செய்த அவலம்
|மும்பையில் தனது 15 வயது மகளை தந்தையும், அவரது சகோதரரும் பலாத்காரம் செய்ததில் கர்ப்பமடைந்த சிறுமி, போலீசில் புகார் அளித்து உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் வசாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரமோத் ஜோகிந்தர் சாஹூ (வயது 48). கிறிஸ்தவ சமூக நபரான இவர் பாதிரியாராகவும் உள்ளார் என கூறப்படுகிறது. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 1-ந்தேதி பிரமோத்தின் 2-வது மனைவி வேலைக்கு சென்றுள்ளார். சிறுமியின் 4 சகோதரர்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.
இந்த சூழலில், மகளை பிரமோத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சிறுமி போலீசில் அளித்த புகாரின் பேரில் பிரமோத் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரமோத்தின் சகோதரரான கவுரி சங்கர் சாஹூ (வயது 44) என்ற மும்பையின் காந்திவலி பகுதியில் வசிப்பவர் மீதும் வழக்கு பதிவானது.
இதுபற்றி போலீசாரில் அளிக்கப்பட்ட எப்.ஐ.ஆர். பதிவில், பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு சிறுமியை கட்டாயப்படுத்தி கடந்த நவம்பர் 1-ந்தேதி பிரமோத் இழுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில், குளித்து விட்டு வெளியே வந்த சிறுமியை, பெரிய அறையில் அமர்ந்து இருந்த பிரமோத், சமையலறைக்கு இழுத்து சென்று தரையில் தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். அடுத்த அறையில் இருந்த பிரமோத்தின் சகோதரர் பின்னர் வந்து, பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுபோன்று சிறுமியை பலமுறை இருவரும் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
எப்.ஐ.ஆர். பதிவின்படி, பிரமோத், அவரது சகோதரர் என இருவரும், நடந்த சம்பவம் பற்றி யாருடனும் கூற கூடாது என மிரட்டி உள்ளனர். இல்லையெனில் சிறுமியின் சகோதரர்களை கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால், சிறுமி அமைதியாக இருந்திருக்கிறாள். பிரமோத்தின் சகோதரர் ஊருக்கு திரும்பி சென்ற பின்னரும், பிரமோத்தின் பலாத்காரம் தொடர்ந்து உள்ளது. தீபாவளிக்கு பின் தொடங்கிய இந்த பலாத்காரம் சத் பூஜைக்கு பின்னரும் தொடர்ந்து உள்ளது என சிறுமி புகாரில் தெரிவித்து உள்ளார்.
இதன்பின் தானே நகரில் உள்ள, தனது சகோதரி வீட்டுக்கு சிறுமியை பிரமோத் அழைத்து சென்றுள்ளார். அதன்பின்பும் பலாத்காரம் தொடர்ந்து உள்ளது. பிரமோத்தின் சகோதரிக்கு இது தெரிந்து உள்ளது.
அவரும் சிறுமியை அமைதிப்படுத்தவே முயற்சித்து உள்ளார். சிறுமியை புகைப்படமும் எடுத்து வைத்து கொண்டார். அவர், வீட்டில் இல்லாதபோது, அவரது கணவரும், பிரமோத்துடன் சேர்ந்து பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதன்பின்பு, குடும்பத்தினர் யாருடனும் கூறி விட கூடாது என்பதற்காக தர்பங்கா நகருக்கு சிறுமியை கூட்டி சென்றுள்ளார். வீட்டை விட்டு போக கூடாது. யாருடனும் பேச கூடாது என பிரமோத் தடை போட்டுள்ளார்.
எனினும், கடந்த நவம்பர் 24-ந்தேதி அந்த பகுதியில் இருந்து தப்பி, தனது மூத்த சகோதரரிடம் சிறுமி தகவல் தெரிவித்து உள்ளார். இதன்பின்பு, அவர் உதவியுடன் நவம்பர் 27-ந்தேதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த பிரமோத் என்பவர் 2015-ம் ஆண்டு நடந்த பலாத்கார சம்பவத்திலும் தொடர்பு உள்ளவர் என கூறப்படுகிறது. கர்ப்பமடைந்த சிறுமி, புகாரை கூற சென்ற இடத்தில், புகாரை திரும்ப பெறும்படி காவல் அதிகாரி மணீஷா பாட்டீல் என்பவர் சிறுமி, சகோதரர் என இருவரையும் தொடர்ந்து சித்ரவதை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சார்பில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.