< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
|6 Sept 2022 8:33 PM IST
பெலகாவியில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
பெலகாவி (மாவட்டம்) தாலுகா சுலகா கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயக் கல்காம்பகர்(வயது 24). இவரது தந்தை கோபால் அகசகேகர்(52). இவர்கள் இருவரும் தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து தங்களது வீட்டின் மாடியில் இரும்பு சீட்களால் கூடாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது இரும்பு சீட் உரசியது.
இதனால் இரும்பு சீட் மூலம் மின்சாரம் பாய்ந்து விநாயக்கும், கோபாலும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களது உறவினர் படுகாயம் அடைந்தார். தற்போது அவர் பெலகாவி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.