< Back
தேசிய செய்திகள்
லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து- எம்.எல்.ஏ படுகாயம், உதவியாளர் பலி
தேசிய செய்திகள்

லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து- எம்.எல்.ஏ படுகாயம், உதவியாளர் பலி

தினத்தந்தி
|
5 Jan 2024 12:24 PM IST

படுகாயமடைந்த எம்.எல்.ஏ, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் நெல்லூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.பர்வத ரெட்டி சந்திரசேகர் ரெட்டி. இவர் தனது உதவியாளர் வெங்கடேஸ்வரலுவுடன் விஜயவாடாவில் இருந்து நெல்லூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்ற கார் டகர்த்ரி பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் எம்.எல்.ஏ. பர்வதரெட்டியின் உதவியாளர் வெங்கடேஸ்வரலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பர்வதரெட்டி மற்றும் கார் டிரைவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த எம்.எல்.ஏ பர்வதரெட்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்