< Back
தேசிய செய்திகள்
பணமோசடி வழக்கு: பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
தேசிய செய்திகள்

பணமோசடி வழக்கு: பரூக் அப்துல்லா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

தினத்தந்தி
|
27 May 2022 7:03 AM GMT

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பரூக் அப்துல்லாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது.

2001 முதல் 2011 வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தபோது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் 94 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக வரும் 31-ம் ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்மனை தொடர்ந்து வரும் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரூக் அப்துல்லா நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்