பாட்னா எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா பங்கேற்பு
|பாட்னா எதிர்க்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பரூக் அப்துல்லா, மெகபூபா பங்கேற்கிறார்கள்
பாட்னா,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், இம்மாதம் 23-ந் தேதி, எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது.
அதில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி (காங்கிரஸ்), தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க.), அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி), மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), உத்தவ்தாக்கரே (சிவசேனா-உத்தவ்) ஆகியோர் பங்கேற்க ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இத்தகவலை ஐக்கிய ஜனதாதள தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். இதுவரை 18 கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.