< Back
தேசிய செய்திகள்
விவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்
தேசிய செய்திகள்

விவசாயிகள் பேரணி: அரியானாவில் 7 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்

தினத்தந்தி
|
14 Feb 2024 11:07 AM IST

நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகர்,

டெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு அமைத்துள்ளது. நேற்று அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர்.

அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டினர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்றும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அரியானாவில் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், படேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களில் தொலைபேசி அழைப்புக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை வரை இந்த தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்