< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவிலும் விவசாயிகள் போராட்டம்
தேசிய செய்திகள்

மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவிலும் விவசாயிகள் போராட்டம்

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மைசூருவில் மெழுகுவர்த்தி ஏந்தி இரவிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மைசூரு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் நேற்று முன்தினம் கர்நாடகம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

மைசூருவிலும் முழுஅடைப்பு போராட்டம் ெவற்றி அடைந்தது. மைசூரு நகரில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவிலும் காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு விவசாயிகள் மெழுகுவர்த்தியை ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அப்போது தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்