< Back
தேசிய செய்திகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல்

image source: PTI

தேசிய செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியல்

தினத்தந்தி
|
3 April 2023 3:42 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் விவசாயிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

சண்டிகார்,

பஞ்சாப்பில் சாலைப்பணிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, பருவம் தவறிய மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம், விவசாய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி சார்பில் குர்தாஸ்பூரில் உள்ள படாலா ரெயில் நிலையத்தில் விவசாயிகள் நேற்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான விவசாயிகள் ரெயில் நிலையத்தில் கூடாரம் அமைத்து தங்கியதுடன், தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதி வழியாக ரெயில் சேவை தடைபட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்