< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
|30 Nov 2022 12:15 AM IST
உப்பள்ளியில் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
உப்பள்ளி:
உப்பள்ளி தாலுகா சுல்லா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா மடிகேரி (வயது 50). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்காக தெரிந்தவர்களிடம் ரூ.1 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். ஆனால் விவசாயத்தில் போதிய லாபம் கிடைக்காததால், வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்து வந்ததால் மனமுடைந்த ஈரப்பா, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.