< Back
தேசிய செய்திகள்
பண்ட்வாலில்  குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை
தேசிய செய்திகள்

பண்ட்வாலில் குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
3 Oct 2023 12:15 AM IST

பண்ட்வாலில் குளத்தில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா நெரலகட்டே பகுதியை சேர்ந்தவர் நாராயணா குலால். இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் நாராயணா குலால் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாராயணா குலால் குடும்பத்துடன் சூரிகுமேரு பகுதியில் குடியேறினார்.

இந்தநிலையில், வீட்டில் பண்ட்வாலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி, நாராயணா குலால் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அவர் பர்லொட்டு பகுதிக்கு சென்று அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பண்ட்வால் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் குளத்தில் குதித்து நாராயணா குலாலின் உடலை மீட்டனர். இதையடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பண்ட்வால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவசாயி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்