< Back
தேசிய செய்திகள்
தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
தேசிய செய்திகள்

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தினத்தந்தி
|
15 Aug 2023 12:15 AM IST

கடன் தொல்லையால் தூக்குப்போட்டு விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

உப்பள்ளி:

தார்வார் (மாவட்டம்) தாலுகா தடகோட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் நாகேஷ் சங்கரப்பா லக்கந்தி(வயது 34). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் நாகேஷ் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் விவசாயத்திற்காக வங்கியில் இருந்தும், கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கினார். ஆனால் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

மேலும் அவருக்கு கடன் கொடுத்தவர்களும் பணத்தை திருப்பிக்கேட்டு நெருக்கடி கொடுத்தனர். வங்கியில் இருந்தும் கடனை திரும்ப செலுத்தக்கூறி நோட்டீசுகள் வந்தன. இதனால் மனமுடைந்த நாகேஷ் நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்