< Back
தேசிய செய்திகள்
திருமணமாகி அடுத்த நாளே தனது மனைவியை கொடூரமாக தாக்கிய பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா
தேசிய செய்திகள்

திருமணமாகி அடுத்த நாளே தனது மனைவியை கொடூரமாக தாக்கிய பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா

தினத்தந்தி
|
23 Dec 2023 5:15 PM IST

விவேக் பிந்திரா தாக்கியதில் மனைவி யானிகாவின் ஒரு காது கேட்காமல் போனது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிப்பவர் பிரபல யூடியூபர் விவேக் பிந்திரா (வயது 41). இவர் தலைசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளராக ஆசிய அளவில் விருது பெற்றவர். மேலும் 9 கின்னஸ் சாதனைகள் உள்பட 11 உலக சாதனைகள் படைத்தவர். இவருக்கு யானிகா என்ற பெண்ணுடன் கடந்த 6 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு அடுத்த நாள் விவேக் பிந்திராவுக்கும் அவருடைய தாயார் பிரபாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த விவேக் தனது தாயை தாக்கியுள்ளார். இதை தடுக்க யானிகா முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விவேக், யானிகாவை தனியறைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், தனது தாக்குதல் குறித்து மனைவி எவருக்கும் தகவல் தெரிவிக்காதிருக்க, யானிகாவின் செல்போனையும் உடைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த சம்பவம் பற்றி அறிந்த யானிகாவின் சகோதரர் வைபவ் குவாத்ரா உடனடியாக நொய்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விவேக் பிந்திராவின் வீட்டிற்கு சென்ற போலீசார் யானிகாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விவேக் பிந்திரா தாக்கியதில் மனைவி யானிகாவின் ஒரு காது கேட்காமல் போனது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மகனுக்கு எதிராக தாய் புகார் கொடுக்க முன்வராததால், மனைவி யானிகாவின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விவேக் பிந்திராவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்