ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்
|தெலுங்கு திரைப்பட நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயசுதா, அண்மையில் விஜய்யின் 'வாரிசு' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமின்றி அரசியலிலும் ஜெயசுதா கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 2019-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் தருண் சங்க் ஆகியோர் முன்னிலையில் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்.