பங்கு சந்தைகள் வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவு
|மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 174 புள்ளிகள் சரிவடைந்து 61,119.75 புள்ளிகளாக இருந்தது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சரிவு கண்டது. இதனால், பங்கு சந்தையில் 174 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,119.75 புள்ளிகளாக வர்த்தகம் காணப்பட்டது.
இதில், ஜிண்டால் வேர்ல்டு, ஈகுவிடாஸ் வங்கி, என்.எப்.எல்., எச்.டி.எப்.சி. லைப், எஸ்.பி.ஐ. லைப், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்ளிட்ட பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு வர்த்தக தொடக்கத்தில் 56 புள்ளிகள் சரிவடைந்து, 18,175.75 புள்ளிகளாக இருந்தது. இதன்படி, நிப்டியில் ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகியவை சரிவுடன் காணப்பட்டன.
அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய கொள்கை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், ஆசிய அளவிலான பங்கு சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.