< Back
தேசிய செய்திகள்
கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
9 Oct 2022 12:30 AM IST

மல்பே அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்தார்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் மல்பே அருகே உள்ள எஜமாடி கோடியை சேர்ந்தவர் ரமேஷ் கோட்டியன் (வயது 75). இவர் நேற்றுமுன்தினம் அதிகாலை மீன்பிடிப்பதற்காக அரபி கடலுக்குள் படகில் சென்று இருந்தார்.

அப்போது கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் படகில் இருந்து கடலுக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வெகுநேரம் ஆகியும் கரைக்கு திரும்பாததால் துறைமுக அதிகாரிகள் அவரை தேடி கடலுக்குள் சென்றனர்.

அப்போது கடலில் பிணமாக கிடந்தார். அவரது உடலை அதிகாரிகள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து மல்பே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்