< Back
தேசிய செய்திகள்
போலி எண்ணெய் தயாரித்து விற்ற வியாபாரி கைது
தேசிய செய்திகள்

போலி எண்ணெய் தயாரித்து விற்ற வியாபாரி கைது

தினத்தந்தி
|
6 April 2023 8:48 PM GMT

முல்பாகலில், பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி எண்ணெய் பாக்கெட்டுகள் தயாரித்து விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோலார் தங்கவயல்:

முல்பாகலில், பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி எண்ணெய் பாக்கெட்டுகள் தயாரித்து விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 கோடி மதிப்பிலான எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி எண்ணெய் பாக்கெட்டுகள்

கோலார் மாவட்டம் முல்பாகல் டவுன் பகுதியில் மாட்டு கொழுப்பை உருக்கி அதை பாக்கெட்டுகளில் அடைத்து பிரபல நிறுவனங்களின் பெயரில் ஒருவர் விற்பனை செய்து வருவதாக முல்பால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் முல்பாகல் போலீசார் டவுனில் உள்ள ஜகாங்கீர் மொகல்லா தெரவுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் மாட்டு கொழுப்பை உருக்கி அதை பிரபல எண்ணெய் நிறுவனங்களின் பெயர் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து சமையல் எண்ணெய் என்று கூறி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பிரபல எண்ணெய் நிறுவனன்களின் பெயரில் போலி எண்ணெய் பாக்கெட்டுகள் தயாரித்து விற்ற வியாபாரியான சுகேல்(வயது 37) என்பவரை கைது செய்தனர். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பறிமுதல்

அவரிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 17 டன் போலி எண்ணெய் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது முல்பாகல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் முல்பாகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்