< Back
தேசிய செய்திகள்
அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது
தேசிய செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றிய போலி மருத்துவர் கைது

தினத்தந்தி
|
22 May 2022 8:09 AM GMT

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 10 நாட்களாக மருத்துவராக பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 10 நாட்களாக இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவது,

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறையை சேர்ந்தவர் நிகில் (வயது 23). அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீனு மற்றும் சரஸ்வதி இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவர் வேடமணிந்து நிகில் வந்துள்ளார்.

அப்போது நீனு,சரஸ்வதி ஆகியோரின் உடல் நிலையை இவர் பரிசோதனை செய்து மருந்து கொடுக்கவும், சீட்டு எழுதிக் கொடுக்கவும் என பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்த இரு பெண்களின் ரத்தம், கபம் ஆகியவைகளை பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அதற்கு பணம் செலவு ஆகும் என கூறி அவர்களிடம் பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை இந்த இரு பெண்களையும் பரிசோதிப்பதற்காக வார்டு தலைமை மருத்துவர் வந்தார். இரு பெண்களின் கட்டிலில் மாட்டி வைக்கப்பட்டுள்ள உடல் பரிசோதனை குறிப்பு அட்டையை அவர் பார்த்த போது சில தகவல்கள் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையொட்டி டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிகிச்சை அளித்த நிகில் போலி டாக்டர் என தெரியவந்தது.

உடனடியாக டாக்டர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்ட வெளிப்புற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். அவர்கள் விரைந்து வந்து நிகிலை கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு சிலர் வெளியில் கிளினிக் நடத்தி போலி மருத்துவர்கள் என தெரிந்து கைது நடவடிக்கை அடிக்கடி நடப்பது உண்டு. ஆனால் ஒரு அரசு மருத்துவமனையில் 10 நாட்களாக ஒரு போலி டாக்டர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்