4 பாடங்களில் தோல்வி: 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
|அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என மாணவியிடம் பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கெப்ரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் தனுஸ்ரீ (வயது16). இவள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதி இருந்தாள். இந்தநிலையில், கடந்த 9-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில், தனுஸ்ரீ 4 பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாள். இதனால் அவள் மனம் உடைந்து காணப்பட்டாள். மேலும், தனுஸ்ரீ வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தாள். இதையடுத்து பெற்றோர், அவளிடம் அடுத்த தேர்வில் 4 பாடங்களிலும் வெற்றி பெற்று விடலாம் என ஆறுதல் கூறி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை தனது அறையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து தகவல் அறிந்த ஒசதுர்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒசதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.