< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் கடும் குளிர்: சாலைவாசிகளுக்கு தற்காலிக முகாம்
|10 Jan 2024 5:41 AM IST
டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் தீ மூட்டி குளிர்காய்வது என பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சாலைவாசிகளின் நிலை பரிதாபத்துக்கு உரியதாகி இருக்கிறது. இதனால் அவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போது 190 கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 8 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தேவைக்கேற்ப இந்த கூடாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.