< Back
தேசிய செய்திகள்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
தேசிய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு

தினத்தந்தி
|
12 Oct 2023 6:10 PM IST

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் அவருக்கு தற்போது 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்