< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 14-ந்தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை நீட்டிப்பு
தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 14-ந்தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை நீட்டிப்பு

தினத்தந்தி
|
7 Jan 2023 7:46 PM IST

பள்ளிகளுக்கு 14-தேதி வரை குளிர்கால விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சண்டிகர்,

வட மாநிலங்களில் குளிர் காலங்களில் வழக்கமாக அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இமாச்சல பிரதேசம், பஞ்சாப், காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாலைகளில் பனிமூட்டம் காரணமாக சில விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் 9-ந்தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால், வரும் 14-தேதி வரை குளிர்கால விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.



மேலும் செய்திகள்