< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

தினத்தந்தி
|
18 Feb 2024 8:36 PM IST

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து வெளியான அறிவிப்பு. ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது.

ஆனால், அமித்ஷா ஒப்புதலுடன் பதவியில் தொடர்ந்து வந்தார். இந்த சூழலில்தான் ஜே.பி நட்டாவின் பா.ஜ.க தேசிய தலைவர் பதவி வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்