< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
|28 Sept 2022 2:30 PM IST
நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 5 கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் நாளை மறுநாள் (30ஆம் தேதி) உடன் முடிவடைந்த நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலவச ரேஷன் திட்டமான கரிப் கல்யாண் அன்ன யோஜனா மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.