< Back
தேசிய செய்திகள்
நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு

தினத்தந்தி
|
19 March 2024 12:26 AM IST

ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இவர் ஜாமீன் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ஒரு முறை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் செந்தில்பாலாஜி 2-வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தள்ளுபடி செய்தது. இதற்கிடையே ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி சார்பில் வக்கீல் ராம்சங்கர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்