< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு போன்ற பொருள் கண்டுபிடிப்பு: போலீசார் விசாரணை
|11 Nov 2022 6:55 AM IST
நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் வெடிபொருள் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் அடியில் வெடிபொருள் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலை போகவதி ஆற்றின் பாலத்தின் அடியில், மின்சார வயர்கள் மற்றும் ஒரு கடிகாரத்துடன் இணைக்கப்பட்ட தலா ஆறு ஜெலட்டின் குச்சிகள் கொண்ட இரண்டு பொருள் கண்டுபிடிக்கப்பட்டன, என்றார்.
இதையடுத்து ராய்காட் காவல்துறையின் மூத்த அதிகாரிகள், மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) மற்றும் நவி மும்பையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அந்த கருவியை கைப்பற்றிய அதிகாரிகள் அப்பகுதியில் விரிவான தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.