< Back
தேசிய செய்திகள்
இளைஞர்கள்- ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்பு ஆராய குழு- மன்சுக் மாண்டவியா
தேசிய செய்திகள்

இளைஞர்கள்- ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்பு ஆராய குழு- மன்சுக் மாண்டவியா

தினத்தந்தி
|
4 April 2023 10:44 AM IST

இளைஞர்கள்- ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்பு ஆராய குழு- மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

இந்தியாவில் இதுவரை 214 கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்திய உருமாறி உள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய்களை சமாளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

ஐசியூ படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான பராமரிப்பு ஏற்பாடுகள் தயாராக வைக்கபட்டு உள்ளன.

கொரோனா வைரஸ் வகைகள் எவ்வாறு உருமாறும் என்பதை கணிக்க இயலாது, ஆனால் இப்போது எழுச்சியை உண்டாக்கும் துணை வகைகள், பேரழிவை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை அல்ல.

இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்களிடம் கூட அதிகரித்து வரும் மாரடைப்புகளுக்கான காரணம் குறித்து சுகாதார அமைச்சகம் கொரோனா உடன் இதற்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆராய ஆராய்ச்சியை குழுவை அரசு நியமித்துள்ளது.மேலும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுவரை, நமது தடுப்பூசிகள் தற்போதுள்ள அனைத்து வகை கொரோனா வைரஸ்களுக்கு எதிராக வேலை செய்து வருகின்றன என கூறினார்.

மேலும் செய்திகள்