மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்
|மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி,
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோர்ட்டில் இந்த வழக்கை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.