மரத்தில் கார் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சாவு
|கும்சி அருகே கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவமொக்கா;
முன்னாள் ராணுவ வீரர்
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா மாருதிபுரா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாவினஹோளே பகுதியை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 50). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். இதில் அவரது மகள் கூடைப்பந்து வீரர் ஆவார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கவுரிபிதனூரில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் சின்னப்பாவின் மகள் கலந்து கொண்டார். இதனை காண்பதற்காக சின்னப்பா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். இதையடுத்து போட்டி முடிந்து மூவரும் திரும்பி வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
மரத்தில் மோதியது
இந்த நிலையில் அவர்கள் கும்சி அருகே உள்ள திப்பூர் பகுதியில் வந்தபோது திடீரென கார், சின்னப்பாவின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. இதில் அவர் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். ஆனால் அதற்குள் கார் சாலையோர இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் ெநாறுங்கியது. மேலும் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சின்னப்பா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது மனைவி மற்றும் மகள் படுகாயம் அடைந்து உயிரிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
சிகிச்சை
அவர்களை அப்பகுதியினா் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து கும்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்னப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவினஹோளே பகுதியில் சோகத்தை ஏற்பட்டு உள்ளது.