< Back
தேசிய செய்திகள்
பலாத்கார வழக்கில் இருந்து முன்னாள் மந்திரி விடுவிப்பு; டெல்லி கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

பலாத்கார வழக்கில் இருந்து முன்னாள் மந்திரி விடுவிப்பு; டெல்லி கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
12 Sept 2024 12:18 PM IST

டெல்லி முன்னாள் மந்திரி பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது போன்ற ஆபாச சி.டி. ஒன்று வெளிவந்து பரபரப்பானது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆம் ஆத்மி அரசில் 2016-ம் ஆண்டில் மகளிர் மற்றும் குழந்தைகள், சமூகநல துறை மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மந்திரியாக பதவி வகித்தவர் சந்தீப் குமார். டெல்லியில் இளம் வயதில் மந்திரியானவர் என்ற பெருமையை பெற்ற இவருக்கு எதிராக பெண் ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதன்பின் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகினார். 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அவரை ஆம் ஆத்மி கட்சி தகுதி நீக்கம் செய்தது.

இதன்பின்பு கட்சியில் இருந்தும் அவர் வெளியேறினார். 2016-ம் ஆண்டில் பெண் ஒருவருடன் டெல்லி முன்னாள் மந்திரி தகாத உறவில் இருப்பது போன்ற ஆபாச சி.டி. ஒன்று வெளிவந்து பரபரப்பானது. சந்தீப் குமாருக்கு எதிராக புகார் அளித்த பெண், ரேசன் கார்டு பெறுவது தொடர்புடைய விசயத்திற்காக சந்தீப்பின் அழைப்பின்பேரில் அவருடைய வீட்டுக்கு சென்றிருக்கிறார்.

அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பலாத்காரம் செய்து விட்டார் என அதுபற்றிய புகாரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றிய வழக்கு 8 ஆண்டுகளுக்கு பின் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில், சந்தீப் சார்பில் வழக்கறிஞர் சஞ்சய் குப்தா மற்றும் ராஜ்கமல் ஆர்யா ஆகியோர் வாதிட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, வழக்கில் இருந்து சந்தீப் குமாரை விடுவித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்