வருமானத்துக்கு அதிகமாக லட்சக்கணக்கில் சொத்து சேர்த்த வருமான வரித்துறை துணை ஆணையர் மற்றும் மனைவிக்கு சிறை தண்டனை!
|வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், வருமான வரித்துறை முன்னாள் துணை ஆணையருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை,
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், வருமான வரித்துறை முன்னாள் துணை ஆணையருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
51 வயதான அவரது மனைவிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை, ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 61 வயதாகும் கிருபாசாகர் தாஸ், தான் அரசு ஊழியராக இருந்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அளவுகடந்த சொத்துகளை சேர்த்ததாக எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்டது.
அதிகாரி தனது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் ரூ.31,28,168/-க்கு அசையா மற்றும் அசையும் சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அதை பற்றி அவரிடம் தகுந்த சான்றுகள் இல்லை.அவரால் கணக்கு காட்ட முடியவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை நிரூபிப்பதற்காக, அரசுத் தரப்பு 54 சாட்சிகளையும் விசாரித்துள்ளது. 2018இல் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்துவந்த சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி எஸ் ஹச் குவாலானி கூறுகையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் பொருளாதார குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வராவிட்டால் ஒட்டுமொத்த சமூகமும் வேதனை அடையும் என்று கூறினார்.
மேலும், விசாரணை முடிவில், அவர்களிடம் இருந்த ரூ.35,96,644 மதிப்பிலான வரம்பு மீறிய சொத்துக்களை மராட்டிய மாநில அரசிடம் பறிமுதல் செய்ய நீதிபதி குவாலானி உத்தரவிட்டார். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் உடனடியாக சரணடையவும் உத்தரவிட்டார்.