< Back
தேசிய செய்திகள்
வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும்:  தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்
தேசிய செய்திகள்

வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும்: தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன்

தினத்தந்தி
|
26 Jan 2023 11:56 AM IST

தேச கட்டமைப்பே வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் கூறியுள்ளார்.



ஐதராபாத்,


இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள், மாவட்டங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் மாநில மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஒருமுறை கூறும்போது, ஒரு பிரிவினர் மட்டும் அனைத்து வித சலுகைகளையும் பெற்று கொள்வதும், மற்றொரு பிரிவினர் அனைத்து பாரங்களையும் சுமந்து செல்லும் நிலை கூடாது என கூறினார்.

தேச கட்டமைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான விசயங்கள் ஆகும். புதிது புதிதாக உருவாகும் கட்டிடங்கள் அல்ல. அனைத்து விவசாயிகளும் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களும், பண்ணைகள் மற்றும் வீடுகளை வைத்திருக்க வேண்டும்.

இதுதவிர்த்து, ஒரு சிலரிடம் மட்டுமே விவசாய பண்ணைகள் இருப்பது கூடாது. அது வளர்ச்சி அல்ல. வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் தனது உரையின்போது கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்