மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
|மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் பொரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அனைத்து மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய- மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட நிலை மீண்டும் உருவாகக்கூடுடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அதானி மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
திரவ மருத்துவ ஆக்சிஜன் மருத்துவமனை வளாகத்தில் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் உடனடியாக அதை நிறப்பும் பணிகள் நடைபெற வேண்டும். இதனை தொடர்ந்து மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
ஆக்சிஜன் உபகரண கருவிகள், வெட்டிலேட்டர், சுவாச கருவிகள் போன்றவை போதிய அளவில் இருப்தை உறுதி செய்ய வேண்டும்.
மாநிலங்கள் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து கொள்ளலாம். ஆக்சிஜன் இருப்பு குறையும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து, அதை நிவர்த்தி செய்யும் பணியை மேற்கொள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.