< Back
தேசிய செய்திகள்
கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழப்பு...!
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழப்பு...!

தினத்தந்தி
|
9 Jan 2024 8:23 PM IST

உள்ளுர் அணி ஒன்றிற்கு விகாஸ் நெகி(36) என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

நொய்டா,

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது உள்ளுர் நிர்வாகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டியாகும் . இதில் இன்றய போட்டியில் உள்ளுர் அணிகளான மவ்ரிக்ஸ் 11 மற்றும் பிளாசிங் புல்ஸ் ஆகிய அணிகள் விளையாடின. இதில் மவ்ரிக்ஸ் 11 அணிக்காக விகாஸ் நெகி(36) என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார். இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த போட்டியில் அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்