< Back
தேசிய செய்திகள்
பேடிஎம், கேஷ்பிரீ உள்ளிட்ட ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
தேசிய செய்திகள்

பேடிஎம், கேஷ்பிரீ உள்ளிட்ட 'ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை'

தினத்தந்தி
|
3 Sep 2022 5:33 PM GMT

சீன கடன் செயலிகளுக்கு எதிராக அமலாக்க துறை பெங்களூரில் இருக்கும் பேடிஎம் மற்றும் கேஷ்பிரீ போன்ற ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சீனாவை சேர்ந்தவர்களால் கட்டுப்படுத்தப்படும் கடன் செயலிகள் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, ரசோர்பே, பேடிஎம், கேஷ்பிரீ ஆகிய ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் 6 இடங்களில் நடந்த இந்த சோதனையில் சீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களின் வணிக அடையாள அட்டைகள் மற்றும் வங்கி கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்பிலான நிதி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சீன கடன் செயலிகள் இந்தியர்களின் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அவர்களை போலி இயக்குனர்களாக மாற்றி சட்ட விரோத வருமானத்தை உருவாக்குவதாக கூறியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், மேற்படி நிறுவனங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்