< Back
தேசிய செய்திகள்
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் உறவினர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
தேசிய செய்திகள்

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் உறவினர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

தினத்தந்தி
|
5 Jan 2024 2:34 PM IST

புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநில கூட்டுறவுத் துறையில் சர்க்கரை ஆலைகளை மோசடியான முறைகளில் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த மும்பை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ந் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று மும்பை பாராமதி பகுதியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் உறவினருக்கு சொந்தமான பாராமதி ஆக்ரோ நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக புனே, அவுரங்காபாத் மற்றும் அமராவதி உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்