< Back
தேசிய செய்திகள்
கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 7 ஆம் தேதி விசாரணை
தேசிய செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு: 7 ஆம் தேதி விசாரணை

தினத்தந்தி
|
4 Feb 2024 9:03 PM IST

5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கேஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்