< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் என்கவுண்ட்டர்; பயங்கரவாதி சுட்டு கொலை

தினத்தந்தி
|
6 May 2023 6:27 AM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரில் காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடந்து வரும் என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர்..

பாராமுல்லா,

.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

இதன்பின்னர், அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து, அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் கந்தி வன பகுதியில் மற்றொரு என்கவுண்ட்டர் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்