< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 3-வது பயங்கரவாதி சுட்டு கொலை
தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 3-வது பயங்கரவாதி சுட்டு கொலை

தினத்தந்தி
|
9 May 2024 5:43 AM IST

காஷ்மீரில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் கடந்த செவ்வாய் கிழமை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

குல்காம்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கே குல்காம் மாவட்டத்தில் ரெட்வானி பயீன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த செவ்வாய் கிழமை இதே பகுதியில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று நடந்த சண்டையில் 3-வது பயங்கரவாதி கொல்லப்பட்டு உள்ளார். அந்த பயங்கரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதனை காஷ்மீர் போலீசார் எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி எல்லை கடந்து வந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய விமான படை அதிகாரி ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டையும் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்