< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை

தினத்தந்தி
|
2 July 2024 11:28 PM IST

சத்தீஷ்காரின் தம்தாரி மாவட்டத்தில் அம்ஜார் கிராமம் மற்றும் முகோத் வன பகுதிகளில், கடந்த மாதம் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.

நாராயண்பூர்,

சத்தீஷ்காரின் நாராயண்பூர் நகரில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து, நக்சல்களை ஒழிக்கும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாதுகாப்பு படையினருடன், மாவட்ட ரிசர்வ் படையினர், சிறப்பு அதிரடி படையினர் உள்ளிட்டோர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் சிலர் திடீரென படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

எனினும், படை வீரர்கள் தரப்பில் எவரும் காயம் அடையவில்லை. கடந்த ஜூன் 30-ந்தேதியில் இருந்து 2 நாட்களாக தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

கடந்த மாதம் சத்தீஷ்காரின் தம்தாரி மாவட்டத்தில் அம்ஜார் கிராமம் மற்றும் முகோத் வன பகுதிகளில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டு ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்