< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டிய மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
|10 Sept 2023 10:04 PM IST
மராட்டிய மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
தானே,
மராட்டிய மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் சமீபத்தில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று நீர்புகாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பணிகளை முடித்து விட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கி கொண்டிருந்த போது திடீரென லிப்ட் அறுந்து விழுந்தது.
இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.