< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலை கோவில் அருகே கூட்டமாக வந்த யானைகள் - அலறியடித்து ஓடிய கோவில் ஊழியர்கள்
|25 Dec 2022 9:00 AM IST
கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
சபரிமலை,
கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜைக்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், அய்யப்பன் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தேவசம் போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்புக்கு அருகே, சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தன.
இதனை கண்ட ஊழியர்கள், அலறி அடித்து ஒடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.