< Back
தேசிய செய்திகள்
நடிகர் சுதீப் 3 மணி நேரம் மட்டுமே தலைவர்; நாங்கள் எப்போதும் உங்கள் வேலைக்காரர்கள்; சதீஷ் ஜார்கிகோளி ஆவேசம்
தேசிய செய்திகள்

நடிகர் சுதீப் 3 மணி நேரம் மட்டுமே தலைவர்; நாங்கள் எப்போதும் உங்கள் வேலைக்காரர்கள்; சதீஷ் ஜார்கிகோளி ஆவேசம்

தினத்தந்தி
|
9 May 2023 12:15 AM IST

நடிகர் சுதீப் மூன்று மணி நேரம் மட்டுமே உங்கள் தலைவர் என்றும், நாங்கள் எப்போதும் உங்களது வேலைக்காரர்கள் என்றும் சதீஷ் ஜார்கிகோளி கூறினார்.

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் யமகனமரடி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சதீஷ் ஜார்கிகோளி போட்டியிடுகிறார். இவர் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் சகோதரர் ஆவார். இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் பிரசாரம் செய்து வந்தார். அவரை கடுமையாக தாக்கி நேற்று சதீஷ் ஜார்கிகோளி ஹுக்கேரி தொகுதியில் போட்டியிடும் அபய் கவுடா பசகவுடா பட்டீலை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார்.

அதாவது, நடிகர் சுதீப் ஒரு நாளுக்கு 3 மணி நேரம் மட்டுமே தலைவர். அவர் பிரசாரம் முடிந்ததும் வீட்டுக்குள் சென்று விடுவார். ஆனால் நாங்கள் முழுநேர சேவகர்கள். எப்போதும் உங்களுக்காக வேலை செய்து வருகிறோம். முன்பு சுதீப்பை பார்க்க மக்கள் காத்துகிடந்தீர்கள். இன்று தேர்தலுக்காக உங்களை பார்க்க அவர் வந்துள்ளார். சில நடிகர்கள் வந்து தேர்தல் சமயத்தில் கண்ணீர்விடுவதால் எதுவும் மாறிவிடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்