< Back
தேசிய செய்திகள்
தேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி
தேசிய செய்திகள்

தேர்தல் பத்திரம்: உரிய நேரத்தில் விவரங்கள் வெளியிடப்படும் - தேர்தல் ஆணையர் பேட்டி

தினத்தந்தி
|
13 March 2024 11:58 AM GMT

நாடாளுமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறினார்.

புதுடெல்லி,

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பா.ஜ.க., சி.பி.எம்., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளையும், மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகளையும் சந்தித்து பேசியுள்ளோம். தேர்தல்கள் முற்றிலும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்று கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,000-க்கும் அதிகமாக உள்ளனர். 2014-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இறுதியாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. சிறப்பு உரிமைகளை திரும்ப பெற்று 2019-ல் மாநில தகுதி இழந்த பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு முதல் தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். ஜனநாயக திருவிழாவில் இளைஞர்கள் உட்பட அனைவரும் அதிகளவில் பங்கேற்க வேண்டும். எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. அளித்துள்ள தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம். தேர்தல் பத்திரம் குறித்த தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்