< Back
தேசிய செய்திகள்
ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார் - விஜய பிரபாகரன் பேட்டி
தேசிய செய்திகள்

ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் உறுதியளித்துள்ளார் - விஜய பிரபாகரன் பேட்டி

தினத்தந்தி
|
12 Jun 2024 7:01 PM IST

வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக விஜயபிரபாகரன் புகார் மனு அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.இதனை தொடர்ந்து கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு இ-மெயில் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.இந்நிலையில், விருதுநகரில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை குளறுபடிகள் தொடர்பாக அவர் புகார் மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஜய பிரபாகரன் கூறியதாவது,

விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது . குளறுபடி, முறைகேடு தொடர்பான உரிய ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி உறுதியளித்துள்ளார். தோல்வியை கண்டு பயப்படுகிற கட்சி தேமுதிக அல்ல. மறுவாக்கு எண்ணிக்கையில் தோல்வியுற்றாலும் மார்தட்டி வரவேற்று ஏற்றுக்கொள்கிறேன்.கஷ்டப்பட்டு உழைத்து அங்கீகாரம் கிடைக்காததால், ஏற்பட்ட வலியின் வெளிப்பாடுதான் இது. என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்