இனி வேறு மாநிலங்களில் இருந்தும் நீங்கள் வாக்களிக்கலாம் புதிய ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்...!
|புலம்பெயர்ந்தோர் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி
வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்கும் வகையில், பல தொகுதிகளுக்கான தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் (ஆர்விஎம்) ஒரு தொலைதூர வாக்குச் சாவடியிலிருந்து பல தொகுதிகளைக் கையாள முடியும்.
பல தொகுதிகளின் முன்மாதிரி ரிமோட் பல தொகுதிகளின் முன்மாதிரி ரிமோட் இவிஎம்மின் செயல்பாட்டை நிரூபிக்க, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய மற்றும் 57 மாநில அரசியல் கட்சிகளை ஜனவரி 16ஆம் தேதி அழைத்துள்ளதாகவும், சட்ட, செயல்பாடு, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்த கருத்துக் குறிப்பை அவர்களுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டத்தில் தேவையான மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாக்களிக்கும் முறை அல்லது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொழில்நுட்பம், வேறு ஏதேனும் இருந்தால், உள்நாட்டு புலம்பெயர்ந்தோருக்கான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை ஆணையம் கோரியுள்ளது.
செயல்பாட்டை நிரூபிக்க, அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய மற்றும் 57 மாநில அரசியல் கட்சிகளை ஜனவரி 16ஆம் தேதி அழைத்துள்ளதாகவும், சட்ட, செயல்பாட்டு, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்த கருத்துக் குறிப்பை அவர்களுடன் ஏற்கனவே பகிர்ந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சட்டத்தில் தேவையான மாற்றங்கள், நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாக்களிக்கும் முறை அல்லது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர தொழில்நுட்பம், வேறு ஏதேனும் இருந்தால், உள்நாட்டு புலம்பெயர்ந்தோருக்கான மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எழுத்துப்பூர்வ கருத்துக்களை ஆணையம் கோரியுள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது.
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.