< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் வெளியீடு
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் வெளியீடு

தினத்தந்தி
|
25 Nov 2023 10:24 AM IST

ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில், 199 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் காலை 9 மணி நிலவரப்படி 9.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்