< Back
தேசிய செய்திகள்
ஒலல்கெரே அருகே  கார் மோதி முதியவர் சாவு
தேசிய செய்திகள்

ஒலல்கெரே அருகே கார் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

ஒலல்கெரே அருகே வருவாய்துறை முதன்மை செயலாளர் கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் ஒலல்கெரே தாலுகா குனகிலா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜப்பா (வயது68). இவர் தனது சொந்த வேலை காரணமாக ஒலல்கெரெவுக்கு சென்றார். பின்னர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பின்நோக்கி வந்த கார், பசவராஜப்பா மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒலல்கெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பசவராஜப்பா பரிதாபமாக இறந்தார்.

விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார், மாநில வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கட்டாரியாவுக்கு சொந்தமானது என்பதும், அந்த காரை டிரைவர் ஓட்டியதும் தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநில வருவாய்த்துறை முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் கட்டாரியா, பசவராஜப்பாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து ஒலல்கெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்